அன்னிய செலாவணி வழக்கில் சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாலை 3 மணிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். மாலை மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதி இன்று காலை டிடிவி.தினகரனை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு வரவேண்டும் என டெல்லி போலீசார் நேற்று இரவு சம்மன் கொடுத்தனர்.

இந்நிலையில், அன்னிய செலாவணி வழக்கின் விசாரணைக்கு டிடிவி.தினகரன் ஆஜராகவில்லை. இதையடுத்து, இவ்வழக்கை வரும் 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும், அன்றைய தினம் டிடிவி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டனம் தெரிவித்தார்.