Asianet News TamilAsianet News Tamil

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை... உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்..

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ள தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் உள்ளது.

 

Counting of votes in a short while ... Tamil Nadu in extreme excitement
Author
Chennai, First Published May 2, 2021, 7:43 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ள தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடந்து ஏப்ரல்6 ஆம் தேதி நடைபெற்றது. 25 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த தமிழகமும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான  வாக்கு எண்ணிக்கை இன்றும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

Counting of votes in a short while ... Tamil Nadu in extreme excitement

குறிப்பாக சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எந்திரங்கள் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், ராணி மேரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. மூன்று மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழக்கம்போல முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்காக 4  மேஜைகளும், மின்னணு வாக்குகளை எண்ண 14 மேஜைகளும் போடப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காரணத்தால் வாக்கு எண்ணும் வளாகத்தைச் சுற்றி கட்சித் தொண்டர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்று முடிவுகள் காலை 9:30  மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கொரோனா நெருக்கடி மற்றும் விதிமீறல்களை பின்பற்ற வேண்டி உள்ளதால். 

Counting of votes in a short while ... Tamil Nadu in extreme excitement

வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக எண்ணி முடிக்க இரவு 12 மணி கூட ஆகலாம் என கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்கள், செய்தியாளர்கள் கொரோனா இல்லை என்பதற்கான  சான்றிதழை வைத்திருத்தல் அவசியம் எனவும், வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தேர்தல் களத்தில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் உள்ள நிலையில், அவர்களில் யார் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைய போகிறார்கள் என்பது இன்று 11 மணியளிவில் தெரியவந்துவிடும். அதே போல தமிழகத்தின் இருபெரும் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இது என்பதால் சுற்று எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகமாகவே உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios