சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 217 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அம்மாவட்ட எஸ்.பி ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.