உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உள்ள  கொரோனா மையத்தில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேரின் விடுதலை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலையான சின்னச்சாமி பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உள்ள  கொரோனா மையத்தில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சோதனை முடிவு வரும் வரை சின்னசாமியை தனிமைப் படுத்த உள்ளனர்.