#BREAKING கொரோனா பரிசோதனை கட்டணம் அதிரடி குறைப்பு.. சரியான நேரத்தில் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்.!

தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ. 1200 லிருந்து 900ஆக குறைக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Corona test fee Action Reduction... MK Stalin announcement

தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ. 1200 லிருந்து 900ஆக குறைக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த மே 14ம் தேதி சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தனியார் மருத்துவமனைகள், பரிசோதனை மையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணத்தை குறைக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த வகையில்  பரிந்துரையை ஏற்று தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Corona test fee Action Reduction... MK Stalin announcement

தனியார் ஆய்வகங்களில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 800 ரூபாயிலிருந்து 550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் ஆய்வகங்களில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Corona test fee Action Reduction... MK Stalin announcement

பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 1200 ரூபாயிலிருந்து 900 ரூபாய் ஆக முதல்வரின். தனியார் ஆய்வகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios