கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடிகர் ஷாருக் கான் தனது சொகுசு பங்களாவை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடியுள்ளார். 

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 40,425 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்தை கடந்தது. மேலும் 681 பேர் மரணமடைந்ததால், இறப்பு எண்ணிக்கை 27497 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 3 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்பு 11800ஐ கடந்தது. டெல்லியில் 1,22,000 ஆயிரம் பேரும், கர்நாடகாவில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திரா, உத்தரபிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளானர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா ஆகியோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பயந்து தான் வசிங்கும் பங்களாவை பிளாஸ்டிக் கவர் கொண்டு முழுமையாக மூடியுள்ளார் நடிகர் ஷாருக்கான்.