Asianet News TamilAsianet News Tamil

பீகார் தேர்தலில் பாஜக வென்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா ஊசி..!

பீகார் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

Corona injection free for all if BJP wins Bihar elections
Author
Tamil Nadu, First Published Oct 22, 2020, 11:41 AM IST

பீகார் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பாஜக தேர்தல் வாக்குறுதியில், ‘’பீகாரில் நகர், கிராமங்களில் 2022க்குள் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். பீகாரில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.Corona injection free for all if BJP wins Bihar elections

பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ம் தேதி என மூன்று  கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.பிகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் உள்ளார். அவரது கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைந்துள்ளது.Corona injection free for all if BJP wins Bihar elections

அதே போல, காங்கிரஸ்,  இடதுசாரிகள் மற்றும் ஆர்ஜேடி ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட ஏராளமான இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில், பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios