Asianet News TamilAsianet News Tamil

அடிதூள்.. தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்தது.. சுகாதாரத்துறை செயலளர் அதிரடி சரவெடி.

முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் தமிழக கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

Corona infection slows down in Tamil Nadu .. Health Secretary Action Saravedi.
Author
Chennai, First Published Apr 27, 2021, 11:39 AM IST

முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் தமிழக கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அவர், முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் கொரொனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதாகவும், அடுத்த சில நாட்களுக்கு தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Corona infection slows down in Tamil Nadu .. Health Secretary Action Saravedi.

நோய் கட்டுபாட்டு பகுதியில் உள்ளவர்கள் வெளிய வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும் என்றும் இதில் 2000 படுக்கைகள் இந்த வாரம் முதல் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்திற்கு 52 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டுவருவதாகவும், தேவையானவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து வழங்க வேண்டும் என்றும் படிப்படியாக மற்ற மாவட்டகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Corona infection slows down in Tamil Nadu .. Health Secretary Action Saravedi.

ஒரே வீட்டில் இருக்கும் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.கொரோனா பாதிப்பில் சித்த மருத்துவம் நமக்கு கைகொடுத்திருப்பதாகவும், மீண்டும் முழு வீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆக்சிஜன் உறுபத்தி மையங்கள் தொடங்க குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios