Asianet News TamilAsianet News Tamil

கொரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க இதையெல்லாம் செய்தாகணும்... ராமதாஸ் அட்வைஸ்..!

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முதல் நடவடிக்கை  மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்க வேண்டும்.

Corona did all this to escape the third wave ... Ramadoss Advice
Author
Tamil Nadu, First Published Jan 6, 2022, 11:41 AM IST

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.Corona did all this to escape the third wave ... Ramadoss Advice

இதுகுறித்து அவர், ‘’பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட, இன்று ஒவ்வொரு பேருந்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இதற்கான காரணங்களில் முதன்மையானது பள்ளிகள் இயங்குவது தான். இது கொரோனாவை கூடுதலாக பரப்பும்.

வணிக வளாகங்கள், பெரிய கடைகளிலும் கூட்டம் கட்டுக்கு அடங்கவில்லை. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று 5 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இது முதல் அலையின் உச்சத்தில் 80%. பொது இடங்களில் கூட்டம் கட்டுப்படுத்தப்படாவிட்டால்  நிலைமை மோசமாகி விடும் ஆபத்து உள்ளது. எனவே, கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். வணிக வளாகங்களையும், பெரிய கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். Corona did all this to escape the third wave ... Ramadoss Advice

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முதல் நடவடிக்கை  மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்க வேண்டும். பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாத மதுக்கடைகள் கொரோனாவை பரப்பும்.  அதனால் மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்.

நீட் விலக்கு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கடந்த 25-ஆம் தேதியே வலியுறுத்தியிருந்தேன். அந்த வகையில்  தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்று ஆக்கப்பூர்வமாக பங்களிக்கும்.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எப்பாடு பட்டாவது விலக்கு பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. அதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கும்!

’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios