எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 13ம் தேதி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

திடீரென இன்று அதிகாலை அவருக்கு  தீவிராக மூச்சுத்திணல் ஏற்பட்டது. இதனையடுத்து, எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தனர். இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 90 சதவீதம் நுரையீரல் நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு வென்லேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.