Asianet News TamilAsianet News Tamil

கட்சி மாறினால் எவனாக இருந்தாலும் வீடு புகுந்து வெட்டுவேன்.. அலும்பு பேசி எலும்பை முறித்துக்கொண்ட ADMK நிர்வாகி

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் அம்மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு யார் கட்சி மாறினாலும் அவர்களை வீடு புகுந்து வெட்டப்போவதாக தெரிவித்திருந்தார்.

controversy speech... sattur aiadmk union secretary fracture
Author
Virudhunagar, First Published Feb 5, 2022, 12:01 PM IST

அதிமுகவில் போட்டியின்றி வெற்றி பெற்று கட்சி மாறினால் வெட்டுவேன் என பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் அம்மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு யார் கட்சி மாறினாலும் அவர்களை வீடு புகுந்து வெட்டப்போவதாக தெரிவித்திருந்தார்.

controversy speech... sattur aiadmk union secretary fracture

மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். யார் கட்சி மாறுகிறாரோ, கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு,  கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்கிறேன்.  இவ்வாறு கூறுவதற்காக தன் மீது வழக்குப்பதிவு செய்தாலும் பிரச்சனை இல்லை. மேலும், கட்சி மாற நினைப்பவர்கள்  மரணத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சண்முகக்கனி வீடியோ வைரலானது.

இதனையடுத்து, சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது  3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். ஆகையால், இவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது. 

controversy speech... sattur aiadmk union secretary fracture

இந்நிலையில், வழக்குபதிந்த நிலையில் சண்முகக்கனியை கைது செய்ய மேடுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு போலீஸ் சென்றது. அப்போது, போலீசிடமிருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் இருந்து குதித்ததில் சண்முகக்கனியின் கால் முறிந்தது. இதனையத்து, கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios