இராமர் கோயில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு குறிக்கப்பட்ட முகூர்த்த நேரம் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.முகூர்த்த நேரம் மாற்றப்படுமா? என்கிற விவாதம் தற்போது பீடாதிபதிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.


இராமர் கோயில் கட்டும் பணி பல வருடங்களுக்கு பிறகு அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருக்கிறார். அயோத்தியில் நடைபெறும் இந்த விழா கோலாகலமாக கொண்ட இருக்கிறது. 
  
இராமர் கோயிலின் அடித்தளத்தில் வைக்கப்படும் செங்கல் கற்கள் வெள்ளியால் செய்யப்பட்டுட்டுள்ளது. அந்த ஐந்து செங்கற்களை வெறும் 32 வினாடிகளில் வைக்க வேண்டும் என இந்தச் சடங்கின் தேதி மற்றும் நேரம் குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுக்கான நேரத்தைக் குறித்தவர் ஜோதிட வல்லுநராகக் கருதப்படும் ஆச்சார்யா கணேஸ்வர் ராஜ் ராஜேஸ்வர் சாஸ்திரி திராவிட், 

பூமி பூஜைச் சடங்கு ரக்ஷபந்தன் நாளில் தொடங்கினாலும், அடிக்கல் நாட்டுவதற்குக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அதுவும் மதியம் 12.15.15 முதல் 12.15.47 வரையுள்ள மணித்துளிகள் தான்.ஆச்சார்யா திராவிட் அடிக்கல் நாட்டுவதற்குக் குறித்த முஹூர்த்த நேரத்தை ஜோதிஷ பீடாதிபதி, மற்றும் துவாரகா ஷாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஆகியோர் எதிர்த்ததால், முஹூர்த்த நேரம் குறித்த சர்ச்சையும் தொடங்கியுள்ளது.