கோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியதால் சந்தேகமடைந்த பொது மக்கள் லாரியை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் உடனடியாக லாரியை திறக்கச் சொல்லி பொது மக்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்லின்போது கோவை அருகே இரண்டு கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது ஆவணங்கள் ஏதுமின்றி இரண்டு லாரிகளிலும் கட்டுக் கட்டாக கோடிக் கணக்கான ரூபாய் சிக்கியது. 

ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அந்த லாரிகள், அதில் இருந்த பணம் மற்றும் அது யாருடையது என்பது மறந்து குறித்தெல்லாம் மக்கள் மறந்து விட்டனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் லாரிக்குள் டீத்தூள் பாக்கெட்டுகள் இருப்பதாக கூறினார். தொடர்ந்து போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை உடைத்தால் சட்டபிரச்னை ஏற்படும் என்பதால் , லாரியை கலெக்டர் அலுவலகம் கொண்டு சென்று அங்கு வைத்து திறக்க ஏற்பாடு செய்யலாம் என கூறினர்.

எனினும் பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்து தகாரறு செய்ததால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர்.பின்னர் கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர் பூட்டை உடைத்து திறந்ததில் பணம் இல்லை எனவும், டீத்தூள் பாக்கெட்டுகள் இருந்ததும் தெரியவந்தது.