விருதாச்சலம் பகுதியில் சீனாவிற்கு செல்லும் தேங்காய் நாறுடன் நின்ற கண்டெய்னர் லாரியை பிடித்து வைத்துக் கொண்டு திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் செய்த சலம்பல் அந்த பகுதியில் காமெடி நிகழ்வாகிவிட்டது.
விருதாச்சலம் பகுதியில் சீனாவிற்கு செல்லும் தேங்காய் நாறுடன் நின்ற கண்டெய்னர் லாரியை பிடித்து வைத்துக் கொண்டு திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் செய்த சலம்பல் அந்த பகுதியில் காமெடி நிகழ்வாகிவிட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதனால் திட்டக்குடி தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கொளஞ்சியப்பர் கல்லூரிக்கு அருகே சுமார் 500 மீட்டர் தொலைவில் பிரமாண்ட கண்டெய்னர் லாரி ஒன்று வந்து நின்றது. இரவு முழுவதும் அங்கு நின்று கொண்டிருந்த அந்த லாரியை மறுநாள் காலையிலும் யாரும் எடுத்துச் செல்லவில்லை. இதனை அடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகே அந்த லாரி நிற்பதால் அதற்குள் மர்ம நபர்கள் அமர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்வதாக திமுகவினர் கிளப்பிவிட்டனர்.

இதனை அடுத்து திட்டக்குடி திமுக வேட்பாளர் கணேசன் அந்த இடத்திற்கு வந்தார். மேலும் லாரியை உடனடியாக திறந்து சோதனையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து திமுக கூட்டணிக்கட்சியினரும் அங்கு திரண்டனர். உடனடியாக அந்த பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரி ஓட்டுனர் வந்து அது தன்னுடைய லாரி என்றும் அதனை சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது வீடு அருகே தான் உள்ளதாகவும் இப்போது அல்ல எப்போதுமே கண்டெய்னர் லாரியை இங்கு தான் நிறுத்தி வைப்பதாகவும் வேண்டும் என்றால் அக்கம் பக்கத்தினரிடம் கேட்டுக் கொள்ளுமாறு டிரைவர் கூறியுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கதில் உள்ளவர்களும், டிரைவர் கூறுவது உண்மை தான் என்றும் அவரது வீடு அருகே உள்ளதாகவும், வழக்கமாக கண்டெய்னர் லாரியை அவர் இங்கு தான் நிறுத்துவார் என்றும் கூறியுள்ளார். அதற்கு அப்படி என்றால் லாரிக்குள் உள்ளே என்ன இருக்கிறது என்று காட்ட வேண்டும் என்று திமுகவினர் அடுத்த வம்பை இழுத்தனர். அதற்கு, லாரிக்குள் தேங்காய் நார்கள் இருப்பதாகவும், அது சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதால் அதனை நாம் திறக்க முடியாது என்று டிரைவர் கூறியுள்ளார். இது நல்ல கதையாக உள்ளது, தேங்காய் நாறுக்கு எதற்கு சீல் என்று கேட்டு திமுகவினர் லாரியை விட்டு நகர மறுத்தனர்.
தகவல் அறிந்து வந்த விருதாச்சலம் சார் ஆட்சியர் லாரி டிரைவருடன் விசாரித்ததுடன் உள்ளே தேங்காய் நார் இருப்பதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்து உள்ளே தேங்காய் நார் தான் இருக்கிறது, கண்டெய்னருக்குள் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கம் போல் அதனை ஏற்க மறுத்த திமுக வேட்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கண்டெய்னரை திறந்து காட்டினால் தான் செல்வோம் என்று கூறி பிடிவாதம் பிடித்தனர். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் வைத்துள்ள சீலை அவர்கள் தான் அகற்ற முடியும் எனவும் எனவே சென்னையில் இருந்து அவர்கள் வரும் வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

ஆனால் திமுகவினர் மட்டும் கண்டெய்னர் லாரியை விட்டு அகலாமால் அங்கேயே காத்துக் கொண்டிருந்தனர். கண்டெய்னர் லாரியில் தேங்காயந் இருப்பதாக கூறி டிரைவர் கதறியும் கள் நெஞ்சத்துடன் அதனை திமுகவினர் சிறை பிடித்து வைத்திருப்பதால் அதனை துறைமுகத்திறகு கொண்டு செல்ல முடியாமல் டிரைவர் தவியாய் தவித்து வருகிறார்.
