காலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகி, 10 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே இணைத்துக் கொண்ட சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்த தாமோதர் ராஜா. இவரது மனைவி பத்மினி ரெட்டி. இவர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், திடீரென பத்மினி ரெட்டி, காங்கிரசில் இருந்து விலகினார். 

தெலங்கானாவின் பாஜக தலைவர் லட்சுமண் முன்னிலையில் பத்மினி ரெட்டி தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் இணைந்த பத்மினி ரெட்டி, என்ன நினைத்தாரோ என்னவோ திடீரென பாஜகவில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 

பாஜகவில் இணைந்து 10 மணி நேரம் கூட ஆகாத நிலையில், மீண்டும் காங்கிரசில் இணைந்தார் பத்மினி ரெட்டி. மீண்டும் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டது பத்மினி ரெட்டி கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை தற்போதுதான் புரிந்து கொண்டேன். அதனாலேயே நான் எனது முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டேன். தற்போது நான் மீண்டும் காங்கிரசிலேயே தன்னை இணைத்து கொண்டு விட்டதாக பத்மினி ரெட்டி கூறியுள்ளார்.

பத்மினி ரெட்டி கூறியதை காங்கிரஸ் தொண்டர்கள் எந்த அளவுக்கு நம்புகிறார்களோ... புரிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை. இவரது இந்த நடவடிக்கையை பொதுமக்கள் இதனை எப்படி புரிந்து கொள்கிறார்களோ? பத்மினி ரெட்டியின் இந்த நிலைப்பாடு தேர்தல் சமயத்தில்தான் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.