Asianet News TamilAsianet News Tamil

வேலூர் தொகுதியை கேட்கும் காங்கிரஸ்... மிரண்டு போய் அப்போலோவில் அட்மிட்டான துரைமுருகன்..!

பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விடலாம் என உடன்பிறப்புகள் மூலம் திமுக கொளுத்தி போட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
 

Congress to hear Vellore seat
Author
Tamil Nadu, First Published Jun 22, 2019, 5:28 PM IST

மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள திமுக களமிறங்கிய வேலூர் தொகுதியை காங்கிரஸ் கேட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விடலாம் என உடன்பிறப்புகள் மூலம் திமுக கொளுத்தி போட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Congress to hear Vellore seat

பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் 1991-ல் பொறுப்பேற்றது முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். 2019, ஜூன் 14-ம் தேதிவரை தொடர்ச்சியாக 5 முறை என 28 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால், மேற்கொண்டு அவரால் அஸ்ஸாமிலிருந்து தேர்வு செய்ய முடியாத நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிட்டது. மன்மோகன் சிங் இடத்தோடு சேர்ந்து மாநிலங்களவைக்கு இரு இடங்கள் அஸ்ஸாமில் காலியாகின. இந்த இரு இடங்களையும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான அஸ்ஸாம் கன பரிஷத்தும் பங்கீட்டுக் கொண்டன.Congress to hear Vellore seat

இதனால் அங்கிருந்து மீண்டும் ராஜ்யசபாவுக்கு மன்மோகன் சிங் செல்லமுடியாத நிலை. ஆனால், இருமுறை பிரதமராக இருந்த மன்மோகனை ராஜ்யசபாவுக்கு அனுப்ப துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

இதற்காக தமிழ் நாட்டிலிருந்து அவரை மீண்டும் தேர்வு செய்ய ஒரு ராஜ்யசபா தொகுதியை ஒதுக்குமாறு காங்கிரஸ் திமுகவிடம் கேட்டு வருகிறது. ஆனால், திமுக இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அப்படியானால் நாங்குநேரி சட்டசபை தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுக்கிறோம். தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுங்கள் என விஷ்ணு பிரசாத் மூலம் கேட்டிருக்கிறது காங்கிரஸ்.

 Congress to hear Vellore seat

காரணம் 51 தொகுதிகளில் மட்டுமே வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடிக்க இன்னும் 3 மக்களவை உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். ஆகையால் வேலூரை கேட்கிறது காங்கிரஸ். விஷ்ணுபிரசாத் இந்த விஷயத்தை மு.க.ஸ்டாலினிடம் கூற, அவர் துரைமுருகனிடம் இதனைக் கூறியுள்ளார். வேலூரில் மகனை வேட்பாளராக்கி தேர்தல் நடக்காததால் வயிற்றெரிச்சலில் இருந்த துரைமுருகனுக்கு இது மேலும் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனையடுத்தே அவர் கமுக்கமா  அப்போல்லோவில் அட்மிட் ஆனதாக கூறுகிறார்கள்.

 Congress to hear Vellore seat

இதனையடுத்தே காங்கிரஸ் கட்சியை கலங்கடிக்கும் விதமாக கே.என்.நேருவை வைத்து, திமுக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு நாட்கள் பல்லாக்கு தூக்கும். உள்ளாட்சி தேர்தலில் தனித்தே களமிறங்க வேண்டும் என்கிற குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார். இதன் மூலம் காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்து வாயடைக்க வைக்கலாம் என திமுக கணக்குப்போட்டு காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios