Asianet News TamilAsianet News Tamil

ராஜினாமாவுக்கு தயாரான ராகுல்... ஏற்க மறுத்த காரிய கமிட்டி..!

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல்காந்தி முன்வந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. ஆனால் ராகுலியின் ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். 

Congress President Rahul Gandhi offers his resignation
Author
Delhi, First Published May 25, 2019, 1:08 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல்காந்தி முன்வந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. ஆனால் ராகுல்காந்தியின் ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். Congress President Rahul Gandhi offers his resignation

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்க உள்ளார். பாஜக 353 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்தமக்களவை தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் கடந்த முறைபோன்று இந்த முறையும் எதிர்கட்சி அந்தஸ்து கை நழுவியுள்ளது. 18 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை. Congress President Rahul Gandhi offers his resignation

மேலும் உத்தரபிரதேசத்தில் நேரு பரம்பரையின் பாரம்பரியமான அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்றது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் பொதுசெயலாளர் பதவி அளிக்கப்பட்டு தேர்தலில் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. Congress President Rahul Gandhi offers his resignation

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பதவியை ராஜினாமா செய்வதாக காரியகமிட்டி கூட்டத்தில் கடிதம் அளித்தார். ஆனால் ராகுலின் ராஜினாமாவை ஏற்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர். ராகுல் தொடர வேண்டும் என கட்சியின் காரியகமிட்டி உறுப்பினர்கள் வலிறுத்தியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios