திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தமிழிசை சவுந்தரராஜன் வெளுத்து வாங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில் ஒரு உறுப்பினர்கள் கூட இல்லாத திமுக எவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது திமுக எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்தது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தை எப்போதும் புறக்கணித்து வருகிறது. முற்றிலும் ஒரு பொய் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். 

ரஜினியை பாஜகவின் நட்சத்திர செய்தித்தொடர்பாளர் என்கிறார் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நீட் தேர்வில் மொழிபெயர்ப்பாளர்கள் தான் தவறு செய்துள்ளனர். இதில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. தவறு செய்த்தவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்துக்கான முன்னேற்றத் திட்டங்களுக்கு ரஜினி ஆதரவுக் குரல் கொடுப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.