அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் சில எம்பிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 35க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமாருக்கு கடந்த சில நாட்களாகவே சளி மற்றும் காய்ச்சல் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்லக்குமார் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பித்தக்கது.