கர்நாடகத்தில் எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.  காலையில் 104 இடங்களைப் பெற்ற பா.ஜ.கவின் எடியூரப்பா ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மஜத தலைமையில் ஆட்சியை அமைக்கக் கோரி காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் குமாரசாமி முதல்வராக 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

ஆளுநரை சந்திக்கும் குமாரசாமி தன் தலைமையில் ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஆளுநர் முன் நிறுத்தி தன் பலத்தைக் காட்ட முடிவு எடுத்துள்ளது. ஆளுநரை சந்திக்க முடியாவிட்டால்  எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக தெரிகிறது.