நாங்குநேரி எம்.எல்.ஏவான வசந்தகுமார் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் வழங்கினார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளராக வசந்த குமார் வெற்றி பெற்றார். இதனால் சட்டசபையில் 8 எம்.எக்.ஏக்களாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பலம் 7 ஆக குறைந்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துக் களமிறங்கிய அவர், 2,59,808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைக் கைப்பற்றினார்.  

அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக கூட்டணியின் பலம் சட்டமன்றத்தில் 110 ஆக உள்ளது.