முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எஸ் வழக்கில் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார் . இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . இந்த கைது குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது :

ஒட்டுமொத்த காங்கிரசுக்காரனும் ஊழல்வாதி தான் . அரசன் அன்று கொல்வான். ஆனால் தெய்வம் நின்று தான் கொல்லும். அதே மாதிரி உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சு தான் ஆக வேண்டும் என்று பேசியுள்ள ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடி ஒரு இரும்பு மனிதர் என்றும் கூறியுள்ளார்  .

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு ப.சிதம்பரமும் , கருணாநிதியும் ஒருவகையில் காரணமானவர்கள் என்றவர் , அதனால் சிதம்பரத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை இது என்று விமர்சனம் செய்துள்ளார் .