2006ல் மறைமுக தேர்தலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அதையேத்தான் நானும் செய்கிறேன் என முதல்வர் சொல்வது அழகல்ல. மு.க.ஸ்டாலின் செய்ததைத்தான் நானும் செய்கிறேன் எனச் சொன்னால் அதிமுகவை கலைத்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தொண்டராகிவிடலாம்.” எனத் தெரிவித்தார்.
2021-ல் மக்கள் அதிசயத்தை காண்பார்கள் என ரஜினி சொன்னது அவருடைய புதிய திரைப்படத்துக்கான தலைப்பாக இருக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 2021-ல் தமிழக மக்கள் நூறு சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நடத்திக்காட்டுவார்கள் என்று ரஜினி கூறியது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அழகிரி, “மக்கள் பணி வேறு, அரசியல் வேறு. ரஜினியும் கமலும் சேர்ந்து வந்தாலும் தமிழக அரசியலில் ஜொலிக்க முடியாது. 2021-ல் மக்கள் அதிசயத்தை காண்பார்கள் என ரஜினி சொன்னது அவருடைய புதிய திரைப்படத்துக்கான தலைப்பாக இருக்கலாம்” என்று கலாய்த்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் தொடக்கத்திலிருந்தே தமிழக அரசு நேர்மையாக நடக்கவில்லை. நேரடி முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது. இப்போது, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு கூறுகிறது. மக்கள் பங்களிக்காத எந்தத் தேர்தலும் அவர்களுக்குப் பயன் அளிக்காது. மேலும் மறைமுக தேர்தல் என்பது குதிரை பேரத்துக்குத்தான் வழி வகுக்கும். பண பலத்தையும், அதிகார பலத்தையும் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றும் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
மக்களைச் சந்திக்காமல் கொல்லைப்புறம் வழியாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற அதிமுக அரசு நினைக்கிறது. 2006ல் மறைமுக தேர்தலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அதையேத்தான் நானும் செய்கிறேன் என முதல்வர் சொல்வது அழகல்ல. மு.க.ஸ்டாலின் செய்ததைத்தான் நானும் செய்கிறேன் எனச் சொன்னால் அதிமுகவை கலைத்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தொண்டராகிவிடலாம்.” என கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 23, 2019, 7:10 AM IST