Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்காவுக்கு எதுக்கு போனீங்க..? டிரம்புக்கு தேர்தல் பிரசாரம் செய்யவா..? மோடியைக் கடுமையாக கண்டித்த காங்கிரஸ் கட்சி!

‘ஹவ்டி மோடி’ என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் மேடையில் தோன்றி உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் டிரம்புக்கு மீண்டும் வாக்களித்து அவரை அதிபராக்க இந்தியர்கள் உதவ வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்தார்.

Congress condom PM Modi of Howdy modi programme
Author
Houston, First Published Sep 23, 2019, 10:49 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.Congress condom PM Modi of Howdy modi programme
பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார காலத்துக்கு அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதல் நாள் நிகழ்ச்சியாக  ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ‘ஹவ்டி மோடி’ என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் மேடையில் தோன்றி உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் டிரம்புக்கு மீண்டும் வாக்களித்து அவரை அதிபராக்க இந்தியர்கள் உதவ வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்தார்.Congress condom PM Modi of Howdy modi programme
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதை மனதில் வைத்து ட்ரம்புக்கு ஆதரவாக மோடி பேசினார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அரசு முறை பயணமாக சென்றுள்ள மோடி, டிரம்புக்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டமாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை மோடி பயன்படுத்திவிட்டதாக அரசியல் கட்சியினர் விமர்சித்துவருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மோடிக்கு மோடியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Congress condom PM Modi of Howdy modi programme
அதில், “பிரதமர் மோடியின் செயல்பாடு டிரம்புக்கு ஆதரவான பிரசார நிலையை எடுத்து காட்டுகிறது. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. மோடியின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.” என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios