Asianet News TamilAsianet News Tamil

மண் குதிரையை நம்பி கடல்ல இறங்குறீங்க போல..! கமலை நம்பும் காங்கிரஸை விளாசிய ஸ்டாலின்!

காங்கிரஸை தொடர்ந்து நெருங்கிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்! சில கட்டத்தில் நெருக்கவும் செய்கிறார். எதை நோக்கி? என்றால் ‘தி.மு.க.வுடன் இருக்கும் கூட்டணியை வெட்டிவிட்டு விலகிச் செல்வதை நோக்கித்தான். கமலுக்கு டெல்லி லாபி கொடுத்திருக்கும் அஸைன்மெண்டே இதுதான்!’ என்று அதிரடியாய் விளக்கம் தருகிறார்கள் விமர்சகர்கள்.

Congress attack MK Stalin
Author
Chennai, First Published Oct 22, 2018, 5:25 PM IST

காங்கிரஸை தொடர்ந்து நெருங்கிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்! சில கட்டத்தில் நெருக்கவும் செய்கிறார். எதை நோக்கி? என்றால் ‘தி.மு.க.வுடன் இருக்கும் கூட்டணியை வெட்டிவிட்டு விலகிச் செல்வதை நோக்கித்தான். கமலுக்கு டெல்லி லாபி கொடுத்திருக்கும் அஸைன்மெண்டே இதுதான்!’ என்று அதிரடியாய் விளக்கம் தருகிறார்கள் விமர்சகர்கள். Congress attack MK Stalin

இதுபற்றி மேலும் விளக்கும் விமர்சகர்கள் “கட்சி துவங்கும் முன் தமிழக அரசியல் கட்சி தலைவகளில் முக்கியமானவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன். அதன் பின் ராகுலை டெல்லியில் சந்தித்தார். இதனை ஒரு சம்பிரதாய, நட்பு ரீதியிலான ஒன்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இது அதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. அவரது சமீப கால செயல்பாடுகள் முழுவதும் தி.மு.க.  கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்றும் நோக்கிலேயேதான் இருக்கிறது. Congress attack MK Stalin

உச்சகட்டமாக ‘தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது. கருணாநிதி அனைவரையும் மதிக்க தெரிந்தவர்.’ என்று வெளிப்படையாக வெடி வைத்தார் அவர். இதன் பொருள் என்ன? ஸ்டாலின் யாரையும் மதிக்காதவர்! என்பதுதானே. அதுவும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது! என்றும் வெளிப்படையாக கமல் கூறிவருவதும், முழுக்க முழுக்க தி.மு.க.வின் கூட்டணி கோட்டையை தகர்க்க வேண்டும் எனும் இலக்கில்தானே! கமலை பி.ஜே.பி.யின் ஆள்தான் என்று சிலர் விமர்சனம் செய்வதை இந்த நேரத்தில் அழுத்தமாக யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது!

 Congress attack MK Stalin

இது உண்மைதானோ? சில நாட்களுக்கு முன் தி.மு.க.வை நோக்கி பி.ஜே.பி. நெருங்கி வந்து நட்பு முகம் காட்டியது. ஆனால் ஸ்டாலின் மூர்க்கத்தனமாக பேசி திருப்பி அனுப்பிவிட்டார், கூட்டணி கதவை மூடிவிட்டார். காங்கிரஸுடன் கூட்டணி! என்பதே ஸ்டாலினின் முடிவாக இருக்கிறது. ஆக தமிழகத்தில் அ.தி.மு.க. செல்வாக்கு சரிந்து கிடக்கும் நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி சேர ஆசைப்பட்ட பி.ஜே.பி. அது வாய்ப்பில்லை எனும் நிலையில், தி.மு.க.வின் கூட்டணியை கலைக்கும் ராஜ தந்திரத்தை கையில் எடுத்தது. அந்த கூட்டணி கோட்டையை உடைக்கும் உளிதான் கமல்.” என்கிறார்கள். Congress attack MK Stalin

கமல் தன் மீது வைத்திருக்கும் வம்பு விமர்சனமும், காங்கிரஸை தேவையில்லாமல் நெருங்கி நெருங்கிச் சென்று  நட்பு முகம் காட்டுவதும் ஸ்டாலினை சூடாக்கி இருக்கிறது. சமீபத்திய ஒரு சந்திப்பில் ”என்ன மண் குதிரையை நம்பி வேகவேகமா கடல்லேயே இறங்குறீங்க போல!” என்றாராம். அரசர் சிரித்து மழுப்பி, எல்லாம் மேலே உள்ளவங்க முடிவு! என்பது போல் கையை காண்பித்தாராம். ஏஸியா நெட் தமிழ் அன்றே சொன்னது போல் , தமிழக அரசியலில் கமல்ஹாசன் சாணக்கியராக இருக்கமாட்டார், நல்ல நாரதராகத்தான் இருப்பார் போல.

Follow Us:
Download App:
  • android
  • ios