Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு வெற்றியைக் கொண்டு சேர்த்த துர்காவுக்கு வாழ்த்துகள்... ரூட்டையே மாற்றிய எஸ்.வி.சேகர்..!

 நூறு சதவீதம் பக்தியுடன் இருந்தால் அந்தக் குடும்பத்துக்கே உயர்வு சேரும் என வெற்றியைக் கொண்டு சேர்த்த துர்கா ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
 

Congratulations to Durga who brought victory to Stalin... SV Sekhar's extraordinary opinion..!
Author
Chennai, First Published May 7, 2021, 8:10 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து திமுக சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, அவருடைய மனைவி துர்கா ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.Congratulations to Durga who brought victory to Stalin... SV Sekhar's extraordinary opinion..!
இந்நிலையில்  நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், துர்கா ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை நிரூபித்தவர் துர்கா ஸ்டாலின். ஒரு குடும்பத்தில் ஒருவர் 100% பக்தியுடன் இருந்தால் அந்தக் குடும்பத்துக்கே உயர்வு சேரும் என வெற்றியைக் கொண்டு சேர்த்த துர்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆசிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.Congratulations to Durga who brought victory to Stalin... SV Sekhar's extraordinary opinion..!
திமுக நாத்திக கொள்கைகளைக் கொண்ட கட்சி. இந்துகளுக்கு எதிரான கட்சி என்று தேர்தல் பிரசாரத்தில் பாஜக முன்னெடுத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி  துர்கா ஸ்டாலின், அடிக்கடி கோயில்களுக்கு செல்லும் பழக்கமுடையவர். பரிகாரங்கள் செய்வதிலும் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர். அதை வைத்துதான் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு மனைவி துர்கா ஸ்டாலினின் பக்தி காரணம் என்று எஸ்.வி.சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios