Asianet News TamilAsianet News Tamil

கையில் டார்ச் லைட் வைத்திருக்கும் கமலுக்கு செம்ம டார்ச்சர் கொடுக்கும் அமைச்சர்...!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் கிடைத்ததை ஏதோ ‘கமலின் ம.நீ.ம. நாற்பது தொகுதிகளிலும் தேர்தலே இன்றி வெற்றி பெற்றது!’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்த ரேஞ்சுக்கு குஷியாகி குதூகலித்து வருகிறார் கமல்.

Compliance Minister of Kamal
Author
Tamil Nadu, First Published Mar 11, 2019, 2:46 PM IST

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் கிடைத்ததை ஏதோ ‘கமலின் ம.நீ.ம. நாற்பது தொகுதிகளிலும் தேர்தலே இன்றி வெற்றி பெற்றது!’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்த ரேஞ்சுக்கு குஷியாகி குதூகலித்து வருகிறார் கமல். 

தன் கட்சி சின்னத்தை வைத்து ஸ்பெஷல் போட்டோ ஷுட்டெல்லாம் சுடச்சுட நடத்தி நேற்றே இணையத்தில் வைரல் செய்தார். இந்நிலையில் கமல் கையிலிருக்கும் டார்ச் லைட் சின்னத்தை வைத்தே அவருக்கு செம்ம டார்ச்சர் கொடுக்கும் வகையில் பேட்டி தட்டி, பேஸ்தடிக்க வைத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சின்னம் ஒதுக்கீடு ஆன அன்றே அமைச்சர் இப்படி அபசகுணமாக பேசியிருப்பதை கண்டு மக்கள் நீதி மய்யத்தினர் மனம் நொந்து கிடக்கின்றனர். Compliance Minister of Kamal

அப்படி என்ன பேசிவிட்டார்  ஜெயக்குமார்?...”நாங்கள் பாண்டவர்கள்! தேர்தல் போருக்கு தயாராகிவிட்டோம். கவுரவர்களான தி.மு.க. கூட்டணியை வென்று சாதிப்போம். லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அமோகமாக வெற்றி பெறுவோம்.” என்று ஸ்டாலின் டீமுக்கு கடுப்பை கிளப்பியவர், அப்படியே கமல் பக்கம் திரும்பி...“அவங்கவங்க மனசுக்கு ஏற்ற மாதிரிதான் தேர்தல் சின்னம் கிடைக்கும். எங்கள் கட்சி கலங்கரை விளக்கம் போல் ஓங்கி உயர்ந்தது, சமுத்திரத்திலேயே பல கிலோமீட்டருக்கு வெளிச்சத்தை தந்து, பெரிய பெரிய கப்பல்களையும், சிறு தோணிகளையும் பாரபட்சம் பார்க்காமல் காக்கக்கூடியது. ஆனால் சிலருடைய கட்சியோ ‘டார்ச் லைட்’ போன்று  சிறியது, டார்ச் லைட்டின் வெளிச்சம் மிக மிக சிறிய தூரத்துக்கே பாயும், அந்த வெளிச்சத்தின் மூலம் ஓரிருவர் மட்டுமே பயனடைவார்களே தவிர, பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு எந்த பலனும் இருக்காது. Compliance Minister of Kamal

லைட் ஹவுஸ் பெரிதா, டார்ச் லைட் பெரிதா? லைட் ஹவுஸ்தானே!” என்று போட்டுப் பொளந்துவிட்டார். ஜெயக்குமாரின் நக்கல் கலந்த இந்த விளக்கம் மநீமவை ஏகத்துக்கும் விசும்பி அழ வைத்துள்ளது. ’நான் லோக்சபா தேர்தலில் போட்டியிட போகிறேன்’ என்று கமல் அறிவித்துள்ள நிலையில், ஜெயக்குமார் இப்படி தங்களை வெச்சு செய்திருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios