நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று காலை வந்த விஷால் பூட்டை திறந்து அலுவலகதிற்கு செல்வேன் என்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், பூட்டை உடைப்பதற்கு அனுமதி மறுத்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். சங்க விவகாரங்களில் போலீசார் தலையிட வேண்டாம் என்று போலீசாரிடம் அவர் கூறினார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட  விஷால் மாலை வெளியில் வந்தார்.

இதைத்தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சங்கத்தின் தலைவர் விஷால் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் "விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்க வேண்டியதுதானே, அதுக்காக சங்கத்தை பூட்டுவீர்களா?" என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், தி நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல்லை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த விஷயம் அப்படியே முடிந்திருக்கும் நிலையில், தற்போது நடிகர் சங்க விவகாரம் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. 

விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. பைனான்சியர் மதுரை அன்புவிடம் விஷால் வாங்கியுள்ள கடன் எத்தனை கோடிகள்? அந்த பணத்திற்கு எவ்வளவு வட்டி ?  அந்த வட்டி பணம் கேட்டால் சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கழித்து வருகிறாராம்.

நடிகர் சங்க பணத்திலிருந்து விஷாலின் VFF ஊழியர்களுக்கு மாத சம்பளம் போகிறதாம். நடிகர் சங்கத்தின் பணத்திலிருந்து எதற்காக விஷாலின் தனிப்பட்ட  நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் போகிறது? எனக் கேட்டல் அதற்கும் சரியான பதில் இல்லயாம். எவ்வளவு பணத்தை அவர் வேறு வேறு வங்கிக்கணக்குகளில் மாற்றி வைத்துள்ளார். இது அனைத்துமே விசாரிக்கப்பட வேண்டும் என புகார்கள் எழுந்துள்ளது. விசாரித்தால் நூறு கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பது  புலப்படுமாம்.