Asianet News TamilAsianet News Tamil

திமுக பற்றி புகார்...!!! பழிவாங்குவதாக அமித்ஷாவிடம் முறையீடு...!!

இதனையடுத்து உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேற்று இரவுவரை ஓபிஎஸ்- இபிஎஸ் காத்திருந்த நிலையில் நேற்று அவரை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்  அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர்கள்  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை  சந்தித்து வருகின்றனர்.

Complain about DMK ... !!! Appeal to Amit Shah About revenge ... !!
Author
Chennai, First Published Jul 27, 2021, 12:13 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் சோதனை நடத்தியுள்ள நிலையில், அதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் புகார் கூறிருப்பதாக தகவல் வெளியாகிள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது குறித்தும் அமித் ஷாவிடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட மொத்தம் 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் பல முக்கிய சொத்துஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்படது. இந்த சோதனை அதிமுக தலைமை மற்றும் முன்னாள் அமைச்சர்களை மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் போது ஊழலில் ஈடுபடும் அமைச்சர்களை நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதன் தொடக்கமே எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை என தகவல் பரபரக்கிறது. 

Complain about DMK ... !!! Appeal to Amit Shah About revenge ... !!

இது தொடக்கம்தான் அடுத்தடுத்து மாஜி அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படும் என தகவல் வெளியாகிவருகிறது. இதனால் பதற்றமடைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி ஆகியோர் நேற்றைய பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும், மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். இதனையடுத்து உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேற்று இரவுவரை ஓபிஎஸ்- இபிஎஸ் காத்திருந்த நிலையில் நேற்று அவரை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர்கள்  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை  சந்தித்து வருகின்றனர்.

Complain about DMK ... !!! Appeal to Amit Shah About revenge ... !!

இந்த சந்திப்பில் முக்கிய அரசியல் சூழல் குறித்து ஓபிஎஸ்- இபிஎஸ் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்தும் பேசி வருவதாக கூறப்படுகிறது. நடைபெறுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் அதிமுகவில் எதிர்காலத்தில் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக திமுக ஆட்சியில் எம். ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமித்ஷாவிடம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.  இது பழிவாங்கும் நடவடிக்கை எனவும் இபிஎஸ் அவரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் சசிகலாவால் ஏற்பட்டுள்ள சலசலப்பு உள்ளிட்டவை குறித்தும் அமித்ஷாவிடம் பரிமாரிக்கொள்ளவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios