பிரபல காமெடி நடிகர் சூரி. இந்த கொரோனா நாட்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கையை அனுபவித்து வருகிறார். அவர் தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல சுவாரஸ்யமான கொரோனா 11 வது நாள் வீடியோவை வெளியிட்டுவருகிறார்.

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா வைரஸ் போரில் இருந்து தப்பிக்க மத்திய அரசு மார்ச்24ம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது.இந்த ஊரடங்கு ஏபரல்14ம் தேதி வரைக்கும் நீடிக்கும். வீட்டிற்குள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முடங்கி இருக்கிறார்கள். வசதியுள்ளவர்கள் விஞ்ஞானத்தோடு பொழுதை கழிக்கிறார்கள்.வசதியில்லாதவர்கள் டி.வி வீட்டில் பெரியவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு பொழுதைக் கழித்து நாட்களை உருட்டி வருகிறார்கள்.

Scroll to load tweet…

இந்த நிலையில் ,பிரபல காமெடி நடிகர் சூரி. இந்த கொரோனா நாட்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கையை அனுபவித்து வருகிறார். அவர் தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல சுவாரஸ்யமான கொரோனா 11 வது நாள் வீடியோவை வெளியிட்டுவருகிறார்.

தன் பிள்ளைகளுடன் ஜாலியாக வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நடிகர் சூரி... அண்ணன், தாத்தா, பாட்டி அய்யா,அப்பத்தா என நம்ம சொந்த பந்தங்களை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கங்க அப்பதான் சொந்தபந்தங்களுடன் நெருக்கம் ஏற்படும் என்று மக்களுக்கு கூறுகிறார். 
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் புகைப்படங்களை தன் குழந்தைகளுக்கு காட்டி அவர்கள் எல்லாம் யார் என்பதை அடையாளம் காட்டுவதோடு உறவுமுறையையும் சொல்லிக் கொடுக்கிறார்.அடுத்ததாக தன்னுடைய திருமண ஆல்பத்தை கட்டி 11 வருடமாக நான் லாக்டவுனில் இருக்கிறேன் என்று திருமணம் ஆன நாளை குழந்தைகளுக்கு சொல்லும் போது வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் மனைவியிடன் இருந்து எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது.அதற்கு சூரி சும்ம்மா.. சொன்னேன் என்று சொல்லும் காம்டியோடு 11வது நாளுக்கு குட் பை சொல்லும் வீடியோ ரசிகர்களிடையை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அவர் அந்த வீட்யோவில், தனது வீட்டில் உள்ள போட்டோ பிரேம்களிலும், தனது திருமண புகைப்பட ஆல்பத்தையும் எடுத்து தன் பிள்ளைகளுக்கு காட்டி மகிழ்ந்துள்ளார். அப்போது, தன் மனைவியிடம் கிண்டலாக பேசிய அவர் தன் கல்யாண வாழக்கையை “11 வருஷமா லாக்டவுன் தான்” என காமெடியாகக் கூறினார். அவர் தினசரி போடும் ஒவ்வொரு வீடியோவும் ரசிகர்களைக் கவர்ந்துவருகிறது.