Asianet News TamilAsianet News Tamil

நீ ஆம்பளனா என் ஊருக்கு வா... இல்லை நீ சொல்ற இடத்திற்கு நா வர்றேன்... மு.க.ஸ்டாலின் மீது கே.டி.ஆர் ஆவேசம்..!

துண்டு சீட்டில் எழுதிக் கொடுப்பதை எல்லாம் படித்துக் காட்டாதே. சிக்கலில் மாட்டிக் கொள்வாய். நீயாக பேசி சுயமாக பேசு.

come to my town ... I will come to the place where you say no ... KTR is angry with MK Stalin
Author
Tamil Nadu, First Published Nov 5, 2020, 2:47 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

எங்களுக்கு புழல் ஜெயில் என்றால் உனக்கு திகார் ஜெயில். நாங்கள் ஏன் புழல் ஜெயிலுக்கு செய்யவேண்டும்? என்ன தவறு செய்து விட்டோம்? உன்னைப்போல ஊர் சொத்தை அடிக்கவில்லையே என மு.க.ச்டாலின் மீது ராஜேந்திர பாலாஜி ஆவேசப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,  ’எல்லாரையும் ஜெயிலுக்கு போய் விடுவாய் என்று சொல்கிறாய். என்ன மிரட்டுகிறாயா? நீ என்ன சர்வாதிகாரியா? சதாம் உசேனா? சதாம் உசேன் கதை என்ன ஆனது தெரியுமா உனக்கு? நீ என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா?  நீ சொல்கிறாய் கே.டி.ஆர் மீது போடப்படும் ஓவ்வொரு வழக்குக்கும் வருடம் உள்ளே இருந்தாலும் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று... நீங்கள் செய்த தவறுக்கு 6 தலைமுறை உள்ளே தண்டனை அனுபவிக்க வேண்டும்.  ஸ்டாலின் தான் யோக்கியன் என்று பேசுகிறார்.

 திமுக ஆட்சியில் அடித்த கொள்ளை எத்தனை? அண்ணாநகர் ரவி கொலை கேஸ் எல்லாம் இப்போது நாங்கள் எடுக்க போகிறோம். எப்படி செத்தது அவரது  குடும்பம். பதில் சொல்லுங்கள்? எத்தனை பேர் செத்தார்கள்? அடுத்து சினிமாவில் எவனும் படம் எடுக்க முடியவில்லை. படம் எடுத்தால் தியேட்டர் கொடுக்க விட மாட்டார்கள். கலகம் செய்வார்கள். 100 கோடி ரூபாய் போட்டு பணம் எடுத்தவன் இவர்கள் கேட்டால் ஓடி வந்து ஐம்பது கோடி, அல்லது 30 கோடி ரூபாய்க்கு கொடுத்து விட்டுப் போய்விட வேண்டும்.

இவங்க குடும்பம் மட்டும் தான் படம் எடுக்க வேண்டும். வேறு யாரும் மல்டிலெவலில் ஒரு பெரிய அளவில் கட்டடம் கட்ட முடியாது. அந்த பில்டிங் விலைக்கு வாங்கி விடுவார்கள். இல்லை அண்ணன் விருப்பப்படுகிறார்கள் என்று கேட்பார்கள். எடப்பாடி ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறதா? அம்மாவின் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இருந்ததா? எங்காவது நீர் நிலை ஆக்கிரமிப்பு இருக்கிறதா? அடுத்தவன் சொத்தை நாங்கள் பிடுங்கி இருக்கிறோமா?

உழைக்கிறோம் சாப்பிடுகிறோம். உழைக்கிறோம் பிழைக்கிறோம். ஏய்த்துப் பிழைக்கும் கூட்டம் தான் திமுக. ஸ்டாலின் மீது திமுக கட்சிகாரனுக்கு நம்பிக்கை இல்லை. திமுககாரன் வடநாட்டு வாத்தியார் பிரசாந்த் கிஷோரைத்தான் நம்புகிறான். ஸ்டாலினை நம்பவில்லை. நீங்கள் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது. வாய்ப்பே கிடையாது. கட்சியை இழக்க போவது ஸ்டாலின்.

முதலில் மனிதனுக்கு நம்பிக்கை வேண்டும். அடுத்தவனை குறை சொல்வதற்கு முன்னால் தன்னை திரும்பி பார்க்க வேண்டும். நீ யோக்கியனா என்று சொல்லவேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் அலைக்கற்றை ஊழல் ஷாகித் பல்வா, அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை ஏழெட்டு முறை வந்து சந்தித்து போயிருக்கிறார். ஏன் பார்த்தாய்? சிபிஐ ஸ்டாலின் பற்றி விசாரிக்க ஆரம்பித்தது. மண்ணாய் போன மன்மோகன்சிங் காப்பாற்றிவிட்டார். தன்னுடைய தங்கச்சியை மாட்டி விட்டு இவர் சந்தோசமாய் இருந்து விட்டார். 2ஜி அலைக்கற்றை ஊழலில் லட்சம் கோடி ஊழல் செய்ததற்கு முக்கிய காரணம் ஸ்டாலின். யோக்கியன் வருகிறான் சொம்பை தூக்கி உள்ளே வை என்று கிராமத்தில் சொல்வார்கள். யோக்கியன் வந்தால் சொம்பை வெளியில் வைக்கலாம் அல்லவா?

எல்லாரையும் சிறையில் வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறாய்... நீ என்ன சிட்டி கமிஷனரா? சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா, ஹை கோர்ட் தலைமை நீதிபதியா? நீ யார் தீர்ப்பு சொல்ல... நாங்கள் என்ன பயந்து விடுவோமா? தென் மாவட்டத்தைச்சேர்ந்த வீரமிக்க மண்ணைச் சேர்ந்தவன். நான் உன்னுடைய சலசலப்புக் எல்லாம் அஞ்ச மாட்டேன். பனங்காட்டு நரி. என்னையே மிரட்டி பார்க்கிறாய். என்னை பிடித்து உள்ளே போட்டு விடுவாயா? நீ என் ஊருக்கு வா. நீ நல்ல ஆம்பளனா ஊருக்கு வா. இல்லை நீ சொல்கிற இடத்திற்கு நான் வருகிறேன். துண்டு சீட்டில் எழுதிக் கொடுப்பதை எல்லாம் படித்துக் காட்டாதே. சிக்கலில் மாட்டிக் கொள்வாய். நீயாக பேசி சுயமாக பேசு. எங்களுக்கு புழல் ஜெயில் என்றால், உனக்கு திகார் ஜெயில். நாங்கள் ஏன் புழல் ஜெயிலுக்கு போக வேண்டும்? என்ன தவறு செய்து விட்டோம்? உழைக்கிறோம். பிழைக்கிறோம். உன்னைப்போல ஊர் சொத்தை அடிக்கவில்லையே’’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசப்பட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios