Asianet News TamilAsianet News Tamil

துண்டிக்கப்படும் திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’உதவி எண்... கொரோனாவை வைத்து விளம்பரம் தேட இவ்வளவு செலவா..?

தாங்கள் அழைத்த தொலைபேசி எண்ணை நாங்கள் பதிவு செய்து கொண்டோம். விரைவில் தங்களை எங்களது ஒன்றைணைவோம் வா குழு தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவும் எனக் கூறி அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.  

Come on, let's put together the DMK's number
Author
Tamil Nadu, First Published Apr 28, 2020, 7:00 PM IST

'ஒன்றிணைவோம் வா’என்கிற இயக்கயம் தொடங்கி 5 நாட்களில் 2 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தம்பட்டம் அடித்து வருகிறது திமுக தலைமை. ஆனால், உதவி கேட்க அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணி ல் யாருமே தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது தான் முற்றிலுமான உண்மை. Come on, let's put together the DMK's number

திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவி செய்யும் பொருட்டு ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சி திமுக பல்வேறு நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்து வருவதாகக் கூறப்பட்டது. 

இந்த அமைப்பில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் உதவி தேவைப்படுவோர் அழைக்க ஒரு ஹெல்ப் லைன் நம்பர் கொடுக்கப்பட்டது. உதவி எண்ணான 90730 90730 நம்பருக்கு தொடர்பு கொண்டால் ரெக்கார்ட் செய்யப்பட்ட ஒரு பெண், திமுகவின் ஒன்றினைவோம் வா இயக்கத்தை தொடர்பு கொண்டதற்கு நன்றி. எங்களது அனைத்து உதவியாளர்களும் பிஸியாக இருக்கிறார்கள் சிறிது நேரம் காத்திருக்கவும் என்று பெண்குரல் ஒலிக்கிறது. மீண்டும் அதே பெண் குரல் எங்களது குழுவினர் அனைவரும் பிஸியாக இருக்கின்றனர். தற்போது அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.Come on, let's put together the DMK's number

தாங்கள் அழைத்த தொலைபேசி எண்ணை நாங்கள் பதிவு செய்து கொண்டோம். விரைவில் தங்களை எங்களது ஒன்றைணைவோம் வா குழு தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவும் எனக் கூறி அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.  இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் காத்திருந்தும் மீண்டும் ஒன்றைணைவோம் வா குழுவிற்காக காத்திருந்தும் பலனில்லை. அதாவது அவர்கள் அழைப்பதே இல்லை. 

இந்த ஒன்றிணைவோம் வா இயக்கத்தை முகநூல் பக்கத்தில் விளம்பரப்படுத்த மட்டும் 7 நாட்களுக்கு 2 லட்சத்து 70 ஆயிரத்து 275 ரூபாய் செலவு செய்துள்ளது திமுக தலைமை.  அதாவது ஒரு நாளைக்கு தலா 40 ஆயிரம் ரூபாய். ஃபேஸ்புக் பணத்தில் பணத்தை கட்டினால் பல்லாயிரக்கணக்கானோரில் முக நூல் கணக்கில் இந்த விளம்பரம் சென்று சேரும். Come on, let's put together the DMK's number

அதற்காகத்தான் ஏழு நாட்களுக்கு இவ்வளவு பணத்தை செலவு செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன பிரயோஜனம்..? மக்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகளை கேட்க முடிவதில்லையே. இதற்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? கொரோனாவை வைத்து ஏழைகளுக்கு உதவுவதாக கூறி இப்படியொரு விளம்பரம் திமுகவுக்கு தேவையா என ‘ஒன்றிணைவோம் வா’இயக்க விளம்பரத்திற்கு கீழ் பக்கத்திலேயே  பலரும் கேள்விகளை பதிவிட்டு வருகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios