Asianet News TamilAsianet News Tamil

நான் தேர்தலில் ஜெயிச்சதும் ‘வலிமை’ அப்டேட் வந்துடுச்சு... வானதி சீனிவாசன் ட்விட்டரில் ரகிட ரகிட..!

நான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ‘வலிமை’ அப்டேட் வந்துவிட்டது என்று கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 

Coimbatore south bjp mla vanathi srinivasan on valaimai movie update
Author
Chennai, First Published Jul 11, 2021, 9:53 PM IST

நடிகர் அஜித்குமார் நடிக்கும் 60-வது படம் ‘வலிமை’. இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித் நடித்துவருகிறார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்களை கேட்டு சமூக ஊடங்களில் டிரெண்டிங் செய்வது அஜித் ரசிகர்களின் வழக்கம். இந்தப் படத்தின் அப்டேட்டை பலரிடமும் கேட்பதுண்டு.Coimbatore south bjp mla vanathi srinivasan on valaimai movie update
ஒரு கட்டத்தில் வருத்தமடைந்த நடிகர் அஜித், “இதுபோன்று சிலர் செய்யும் செயல்கள் என்னை வருத்தமடைய செய்கிறது. அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள்” என்று அறிக்கை வெளியிட்ட நிகழ்வும் நடந்தது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை பிரசாரம் களை கட்டியிருந்த மார்ச் மாதத்தில், அஜித் ரசிகர் ஒருவர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் ‘வலிமை’ படம் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பினார். Coimbatore south bjp mla vanathi srinivasan on valaimai movie update
அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நிச்சயம் உங்களுக்கு வலிமை அப்டேட் கிடைக்கும்” என்று ட்வீட் செய்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இது பற்றி பல ரசிகர்கள் வானதிக்கு நினைவுப்படுத்தி கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டது. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே இதுகுறித்து வானதி சீனிவாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில், “நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது” என்று வானதி சீனிவாசன் பதிவிட்டதோடு, அந்தப் படத்தின் போஸ்டரையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios