SP Velumani: என்னைக்குமே கொங்குல கிங்கு நாங்க தான்.. காலரை தூக்கி விடும் எஸ்.பி.வேலுமணி..!

திமுகவினர் போல் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை நிராகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அதிமுக வேட்பாளர்களை, காவல்துறையினர் சம்பந்தமில்லாமல் விசாரணை என்ற பெயரில் பொய் வழக்கெல்லாம் போட்டு அலைக்கழிக்கின்றனர்.

Coimbatore is the fort of AIADMK forever...sp velumani

அதிமுக வேட்பாளர்களை தேர்தல் அதிகாரி அலைகழிப்பதாக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;- திமுகவினர் போல் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை நிராகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அதிமுக வேட்பாளர்களை, காவல்துறையினர் சம்பந்தமில்லாமல் விசாரணை என்ற பெயரில் பொய் வழக்கெல்லாம் போட்டு அலைக்கழிக்கின்றனர்.

Coimbatore is the fort of AIADMK forever...sp velumani

இத்தகைய நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். மாநிலத் தேர்தல் ஆணையம் கூறிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிகாரிகள் வேலை செய்வது இல்லை. யாரையும் மிரட்டி வெற்றி பெற முடியாது. 

Coimbatore is the fort of AIADMK forever...sp velumani

ஆளுங்கட்சியினர் செய்த திட்டங்களை, மக்கள் முன்வைத்து வாக்குவாங்கி வெற்றி பெறலாம். ஆனால், அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு வெற்றிபெறலாம் என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கோவை என்றைக்கும் அதிமுக கோட்டை என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios