புற்று நோய் காரணமாக கடந்த 2 மாதங்களாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்று உரம், நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின்னர், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அனந்த குமார் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996,98, 99,2004,2009,2014 என 6 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெறற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ரசாயனம் ,உரம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

பாஜகவின் தேசியச்செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமாக கருதப்பட்டு வந்த அனந்த குமாரின் திடீர் மரணம் கர்நாடக மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.