Asianet News TamilAsianet News Tamil

இராணுவத்தை மிஞ்சிய எடப்பாடி...! இனி நான் பேச மாட்டேன்... ரெக்கார்டுதான் பேசும்...!

முதலமைச்சர் வெளிநாடு செல்வதற்குள் எப்படியாவது காலியாக உள்ள  அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சில சீனியர் எம்எல்ஏக்கள், முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கேட்டு நச்சரித்துவருகின்றனர். 

cm warning to ministers and mla's
Author
Chennai, First Published Aug 20, 2019, 11:43 AM IST

அமைச்சர் பதவி கேட்டு நச்சரிக்கும் எம்ஏல்ஏக்களிடம் யாருக்கு எப்போது அமைச்சர் பதவி தர வேண்டும் என்பது தனக்கு நன்கு தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பு காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. cm warning to ministers and mla's

வெளிநாடு செல்ல முதலமைச்சர் பழனிச்சாமி திட்டமிட்டுள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்வதற்குள் காலியாக உள்ள அமைச்சர் பதவியை வாங்கிவிட வேண்டும் என சில எம்ஏக்கள்  கங்கனம்கட்டி வேலை பார்த்து வருகின்றனர், சமீபத்தில், தமிழக தகவல் தொழில்நுட்புத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனின் அமைச்சர் பதிவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இந்த நிலையில் அவர் ஜெயலலிதாவைப்போல அதிரடியாக ஆட்சி செய்கிறார் என கீழ்மட்டத்தில் உள்ள கட்சி தொண்டர்கள் பேசத்தொடங்கியுள்ளனர், அதேநேரத்தில் முதலமைச்சரின் நடவடிக்கையை கண்டு சில அமைச்சர்கள் பயந்து போய் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர். அதிரடிகாட்டிய கையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியநாடுகளுக்கு பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் திவிரமாக நடந்து வருகிறது. இந்ந நிலையில் முதலமைச்சர் வெளிநாடு செல்வதற்குள் எப்படியாவது காலியாக உள்ள  அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சில சீனியர் எம்எல்ஏக்கள், முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கேட்டு நச்சரித்துவருகின்றனர். cm warning to ministers and mla's

அப்படி தன்னை சந்திக்க வருபவர்களிடம் ஆரம்பத்தில்  கோபம் காட்டாமல் நிலமை என்ன என்பதை எடுத்துச்சொல்லி புரியவைத்து அனுப்பி வைத்துள்ளார், அப்படியும் விடாமல் தொடரந்து தொல்லை தருபவர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பு காட்டிவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது,விடமல் அமைச்சர் பதிவி கேட்டு நச்சரிப்பவர்களை அழைத்து, தமிழக அமைச்சரவையில் மொத்தம் இருப்பது 35 அமைச்சர் பதவிகள்தான், அதில் யாருக்கு எப்போது பதவி கொடுக்க வேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும், அது மட்டும் இல்லாமல், எல்லா சட்ட மன்ற உறுப்பினர்களும், வளமாக சம்பாதித்து வருகிறீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும், யார்யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, யார் யார் எப்படி சம்பாதிக்கிறீர்கள், உங்களின் பின்னணி தகவல்கள் என்ன என எல்லா தகவல்களும் என்னிடம் உள்ளது.  அதனால் குழப்பம் செய்யாமல் இருப்பது நல்லது என எச்சரித்து அனுப்பிவைக்கிறார், என தகவல்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சில அமைச்சர்களும்  தங்களுக்கு தற்போதுள்ள துறையை மாற்றித்தரும்படி  முதலமைச்சரை சந்தித்துள்ளனர், அவர்களிடமும்  உங்களைப்பற்றி ரெக்கார்டு  உள்ளது என கூறி  ஒட்டுமொத்த அமைச்சர் , எம்ஏக்களையும் கதிகலங்க வைத்துள்ளாராம் முதலமைச்சர் பழனிச்சாமி...

Follow Us:
Download App:
  • android
  • ios