Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மிஸ்ஸான விஷயம்…! மக்கள் மத்தியில் சலசலப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CM Stalin vazhapaddi function
Author
Vazhapadi, First Published Sep 29, 2021, 7:14 PM IST

சேலம்: முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CM Stalin vazhapaddi function

முதலமைச்சர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி என்றால் அந்த நிகழ்வின் தொடக்கத்தின் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் சேலம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் மேற்சொன்ன 2 விஷயங்களும் மிஸ்ஸாகி இருப்பது பெரும் முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது. வாழப்பாடியில் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் தான் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் ஒலிக்கப்படவில்லை. இதை விழாவுக்கு வந்திருந்தவர்க கண்டு உணர்ந்து அதிருப்தி அடைந்தனர்.

CM Stalin vazhapaddi function

பொதுவாக அரசு நிகழ்ச்சியில் நிகழ்ச்ச நிரல் குறித்த தொகுப்பு முன்னர் அறிவிக்கப்படும். ஆனால் வாழப்பாடி அரசு நிகழ்ச்சியில் அப்படி இல்லாமல் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிகழ்ச்சியை உரையாற்றி தொடக்கி வைத்தார்.

அதன் பின்னர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கினார். பிறகு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் தேசிய கீதம் ஒலிக்கப்படாமல் நிகழ்ச்சி முற்று பெற்றிருக்கிறது. இது பெரும் விவாதத்தையும், முணுமுணுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios