இதற்கு திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.. ஆன்லைன் சூதாட்ட பலிகளுக்கு ஸ்டாலினே பொறுப்பு.. அண்ணாமலை சரவெடி.!
ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழக்குமாறு கூறியுள்ளோம். கூடிய விரைவில் பரிசீலனை செய்து ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தனப் போக்கினால் அவசரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழக்குமாறு கூறியுள்ளோம். கூடிய விரைவில் பரிசீலனை செய்து ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதற்கு ஆளுநர் அந்த மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது, அதில் உள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்றார். இந்நிலையில், அமைச்சர் ரகுபதி கருத்துக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் இருக்குதாம்! நல்ல முடிவு எடுக்கிறேன் சொல்லி இருக்காரு! அமைச்சர் ரகுபதி
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அரசாணை பிறப்பிக்காமல் அவசரச் சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.
ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தனப் போக்கினால் அவசரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலன்னா.. பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதை தடுக்க முடியாது.. அலறும் அன்புமணி