அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கட்சியை அழிக்க திமுக முயற்சி செய்கிறார். அதிமுகவை அழிப்பதற்காக தமிழக அரசு பொய் வழக்கு போடுகிறது. நகர்ப்புற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை என ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயக்குமாருக்கு ஜாமீன்

திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட அடுத்தடுத்த வழக்கிலும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு, சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. நேற்றை விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது என்ற விதிகள் இருப்பதால் விடுதலை செய்யப்பட்டவில்லை. இந்நிலையில், இன்று காலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுதலை செய்யப்பட்டார். அவரை முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.

இதையும் படிங்க:- ஜெயக்குமாரை அலறவிட்ட ஆளுங்கட்சி.. ஒருவழியாக 3 வழக்கிலும் ஜாமீன்..

ஜெயக்குமார் குற்றச்சாட்டு

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கட்சியை அழிக்க திமுக முயற்சி செய்கிறார். அதிமுகவை அழிப்பதற்காக தமிழக அரசு பொய் வழக்கு போடுகிறது. நகர்ப்புற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். கள்ள ஓட்டு போட்ட சமூக விரோதியை பிடித்து கொடுத்த என்னை சிறையில் அடைத்தது திமுக அரசு. முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே ஆளும் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. ஹிட்லரின் மறு உருவம் தான் ஸ்டாலின். ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. 

அதிமுகவை அழிக்க முடியாது

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அராஜக போக்குடன் செயல்படுகிறார் ஸ்டாலின். சிறையில் இருந்து என்னை வெளியே அனுப்ப தாமதப்படுத்தினர் என ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.