Asianet News TamilAsianet News Tamil

நிஜமாகவே மக்களின் முதல்வராக மாறிய ஸ்டாலின்.. மாஸான உத்தரவு.. பொதுமக்கள் வரவேற்பு..!

இனி 12 வாகனங்களுக்கு பதிலாக 6 கான்வாய் வாகனங்கள் மட்டுமே முதல்வரின் வாகனத்துடன் பயணிக்கும்.  இதேபோல், முதலமைச்சரின் பயணத்தின்போது பொதுமக்கள் வாகனத்தை தடுக்காமல், முதலமைச்சரின் வாகனத்தோடு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

CM  stalin convoy vehicles reduced
Author
Tamil Nadu, First Published Oct 9, 2021, 5:04 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள் 12ல் இருந்து 6ஆக குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு மே 7ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தின்போது அவரது பாதுகாப்பிற்கும் அவசர தேவைகளுக்காகவும் 12 கான்வாய் வாகனங்கள் அவருடன் பயணிக்கும். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 

CM  stalin convoy vehicles reduced

இனி 12 வாகனங்களுக்கு பதிலாக 6 கான்வாய் வாகனங்கள் மட்டுமே முதல்வரின் வாகனத்துடன் பயணிக்கும்.  இதேபோல், முதலமைச்சரின் பயணத்தின்போது பொதுமக்கள் வாகனத்தை தடுக்காமல், முதலமைச்சரின் வாகனத்தோடு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

அண்மையில் சிவாஜிகணேஷனின் 96வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதற்காக சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து சாலைகளில் போக்குவரத்து நிறுத்தி வைத்தனர். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதை போன்று அந்த சாலை வழியாக உயர்நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர். இதனால் உயர்நீதிமன்றத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால் தனது பணி பாதிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து உள்துறை செயலாளர் ஆஜாரகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

CM  stalin convoy vehicles reduced

அதன்படி காணொலி காட்சி மூலம் ஆஜாரான உள்துறை செயலாளர் பிரபாகரிடம் எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். நடைபெற்ற நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர் சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாது என உறுதியளித்தார்.

CM  stalin convoy vehicles reduced

இதையடுத்து, முதலமைச்சர் அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு போகும் போது இதுபோல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று நம்புவதாக நினைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து முதலமைச்சர் வழங்கிய அறிவுரையின் பேரில் அவரது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios