Asianet News TamilAsianet News Tamil

வஉசி, வேலு நாச்சியார், மருது சகோதரர்களை யார் என்று கேட்க அவர்கள் யார்? மு.க.ஸ்டாலின் ஆவேசம்!!

இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

cm stalin asks that who are they to ask voc velu nachiyar that who they are
Author
Chennai, First Published Jan 25, 2022, 8:25 PM IST

இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் வெப்பம்தான் 2022-ஆம் ஆண்டு வரை நீடித்து வருகிறது. அந்த ஆண்டு மொழிப்போரில் ஏராளமான பெண்களும் போடாடினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட தாளமுத்து நடராசன் நினைவாக அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழுக்காக போராடி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து உயிர் நீத்தவர் நடராசன்.

cm stalin asks that who are they to ask voc velu nachiyar that who they are

மொழிப்போர் தியாகிகளின் நினைவாக பாலங்கள், மணிமண்டபங்கள், சாலைகள் அமைக்கப்படும். தமிழ் மொழிக்காக பேரறிஞர் அண்ணா போன்ற இளைஞர்கள் ஒன்று கூடினார்கள். தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளது. மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம் தான் 2022 ஆம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது. அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது. தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல. இந்தி உள்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதனை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம். மாணவர்கள் போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1967ல் தீர்மானம் கொண்டு வந்தார் பேரறிஞர் அண்ணா. இந்தி திணிப்பு போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுத்தனர்.

cm stalin asks that who are they to ask voc velu nachiyar that who they are

கோவை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் கைதானவர்கள் 6 மாதம் வரை சிறை தண்டனை பெற்றனர். இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். வ.உ.சிதம்பரனாரை கப்பலோட்டிய தொழிலதிபர் தானே என்று டெல்லி அதிகாரி கேட்டுள்ளார். அவர் யாருக்கு எதிராக கப்பல் ஓட்டினார். இந்த புரிதல் கூட இல்லாதவர்கள், தமிழ்நாட்டை, தமிழ் உணர்வை எப்படி புரிந்து கொள்வார்கள். தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழினத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம். தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்காக தொழில் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios