தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நெல்லைக்கு செல்லும்போது, அவருக்குப் பின்னால் போட்டி போட்டுக்கொண்டு அணி வகுத்து வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நெல்லைக்கு செல்லும்போது, அவருக்குப் பின்னால் போட்டி போட்டுக்கொண்டு அணி வகுத்து வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க முதல்வர் எடப்படி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 2.15 மணிக்கு வந்தனர்.
அங்கிருந்து இருவரும் கார்களில் வல்லநாடு வழியாக சேரன்மகாதேவிக்கு சென்று கொண்டிருந்தனர். வல்லநாடு பேருந்து நிலையம் அருகே சுமார் 3.10 மணிக்கு முதல்வர் காருக்கு பின்னால் வந்த கார்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்றன. அப்போது ஒரு கார் திடீரென சாலையை கடந்த கன்றுக்குட்டி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதி நின்றது.
— Mohamed Imranullah S (@imranhindu) January 4, 2021
இதன் காரணமாக பின்னால் வந்த இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக விபத்தில் சிக்கிய காரின் பக்கவாட்டில் மோதி நின்றது. இதில் மூன்று கார்களும் சேதமானது. கார்களில் இருந்த நெல்லை முன்னாள் எம்பி கே.ஆர்.பி.பிரபாகரன், மதுரையைச் சேர்ந்த ராஜமோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இதனையடுத்து பின்னால் வந்த மற்ற அதிமுக நிர்வாகிகளின் கார்களில் முன்னாள் எம்பி பிரபாகரன் உள்ளிட்டோர் ஏறிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 5, 2021, 12:43 PM IST