சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில் அவர் விதி எண் 110 ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள் பின்வருமாறு...

கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் ஆய்வுகள் செய்யப்படும்.

ஒட்டன்சத்திரம், பாப்பிரெட்டிபட்டி, உட்பட 10 இடங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகங்கள் அமைக்கப்படும்.

மதுரை தமிழ்சங்கத்தில் தமிழர் பண்பாட்டு பாரம்பரிய அருங்காட்சியகம் நிறுவப்படும்.

திருப்பணி செய்யப்படும் கிராமப்புற கோயில்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிக்கப்படும்.

ஆதிதிராவிட நல விடுதிகளுக்கு ரூ.13.87 கோடியில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.

வேட்டை தடுப்பு காவலர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.6750 லிருந்து 10000 ஆக உயர்த்தப்படும்.

கோபி, கோட்டூர் உட்பட மூன்று இடங்களில் தொழிற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.

மெட்ரோ ரயில் 4வது வழிதடத்தை நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

மானசரோவர், முக்திநாத் யாத்திரை திட்டங்களுக்கு பயனாளர் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும்.

பத்திரிக்கையாளர் குடும்பநல ஓய்வூதியம் 8000 லிருந்து 10000 ஆக உயர்த்தப்படும்.

என பல்வேறு அறிவிப்புகள் முதலமைச்சர் உரையில் இடம் பெற்றிருந்தன.