Asianet News TamilAsianet News Tamil

ரூ.2000 +2000+= 4000 ரூபாய் 4 நாட்களில் உங்கள் வங்கிக்கணக்கில்... மோடியுடன் எடப்பாடி அதிரடி..!

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.,24 அன்று துவங்கப்பட உள்ளது.

CM and pm to launch Rs 2000 special assistance scheme
Author
Tamil Nadu, First Published Feb 20, 2019, 11:04 AM IST

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.,24 அன்று துவங்கப்பட உள்ளது.CM and pm to launch Rs 2000 special assistance scheme

முதல்வர் பழனிசாமி இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். பிப் 24 துவங்கி பிப்.,28 க்குள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில் ரூ.2000 சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது. கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத்தொழிலாளர்கள் 60 லட்சம் பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். CM and pm to launch Rs 2000 special assistance scheme

இந்த மாத இறுதிக்குள்ளாக அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக அந்த தொகை செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ளதால், அதற்கு முன்னதாக சிறப்பு நிதியை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2 ஆயிரம் ரூபாயை வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநகராட்சியில் ஆணையர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.CM and pm to launch Rs 2000 special assistance scheme

இதேபோல் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டமும் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளது. ரூ.6 ஆயிரம் உதவித் தொகையானது 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios