Asianet News TamilAsianet News Tamil

கிளப்-ஓட்டல்கள்- உணவகங்களில் மது விற்பனை... ஊரடங்கு முடியும் வரை மாற்று ஏற்பாடு..!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ம் தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

Clubs - Hotels - Selling liquor in restaurants ... Until curfew can be arranged
Author
Tamil Nadu, First Published May 9, 2020, 1:50 PM IST

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ம் தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி வழங்கி உள்ளது. Clubs - Hotels - Selling liquor in restaurants ... Until curfew can be arranged

கொரோனா தொற்று ஊரடங்கால்  44  நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும்  சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் பல்வேறு மாநிலங்களில் திறக்கப்பட்டன. இதனால் கூட்டம் மதுபான கடைகளை நோக்கி குவிந்து வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆன் லைன் மற்றும் மறைமுக மதுபான விற்பனையை நடத்த பரிசீலிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.Clubs - Hotels - Selling liquor in restaurants ... Until curfew can be arranged

மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கார் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானங்களை வழங்க அனுமதித்துள்ளன. இந்த நிலையில்  கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ந்தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.

கலால் துறையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் கிளப்புகளின் உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து, ஒரு வாரத்திற்கு பீர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை (ஐ.எம்.எல்) விற்க அனுமதிக்கிறது. காலை 9 மணி மற்றும் இரவு 7 மணி மதுபானம் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios