Asianet News TamilAsianet News Tamil

வரலாற்றுக் சிறப்பு மிக்க தருணம் !! குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவை நிறைவேற்றியது !!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதனை ஆதரித்து 125 உறுப்பினர்களும், எதிர்த்து 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
 

citienship amendment bill in rajayasabha
Author
Delhi, First Published Dec 11, 2019, 10:15 PM IST

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. 

citienship amendment bill in rajayasabha

இந்தநிலையில்  இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே  மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

125 உறுப்பினர்கள் ஆதரவுடன்  மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. 

citienship amendment bill in rajayasabha

105 எம்.பி.,க்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தனர்.  குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். 

மக்களவையில்  இந்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த சிவசேனா,  மாநிலங்களவையில் இந்த மசோதா மீது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios