Asianet News TamilAsianet News Tamil

நானும் காவலாளிதான் டீ கப்புகளை ஒரே நாளில் ஒழித்துக்கட்டிய ரயில்வே நிர்வாகம்...

சதாப்தி ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தேநீர் கோப்பையில் பிரதமர் மோடியின் நானும் காவலாளி என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்ததால், அவசரஅவசரமாக அந்த கோப்பைகளை  வாபஸ் பெற்ற ரயில்வே நிர்வாகம்,  பி.ஜே.பிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தனியார் தொண்டு நிறுவனத்துக்கு  ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது.
 

chowkidhaar tea cups banned in trains
Author
Chennai, First Published Mar 29, 2019, 6:05 PM IST


சதாப்தி ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தேநீர் கோப்பையில் பிரதமர் மோடியின் நானும் காவலாளி என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்ததால், அவசரஅவசரமாக அந்த கோப்பைகளை  வாபஸ் பெற்ற ரயில்வே நிர்வாகம்,  பி.ஜே.பிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தனியார் தொண்டு நிறுவனத்துக்கு  ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது.chowkidhaar tea cups banned in trains

புதுடெல்லியில் இருந்து, உத்தராகண்ட் மாநிலம், காத்கோடம் நகருக்கு காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு தேநீர், சூப் வழங்க பயன்படுத்தப்பட்ட காகித கோப்பையில், பிரதமர் மோடி சமீபத்திய முழக்கமாக " நானும் காவலாளி" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, ரயில்வே துறைசார்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தேநீர் கோப்பையை புகைப்படம் எடுத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படமும், காத்கோடகம் சதாப்தி ரயிலில் வழங்கப்பட்டது என்கிற வாசகமும் வைரலானது.

இதையடுத்து, இந்த விவகாரம் ரயில்வேதுறை அதிகாரிகளின்  பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் சங்கல்ப் அமைப்பு என்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த கோப்பைகள் வழங்கப்பட்டன என்று தெரிவி்க்கபட்டது. இதையடுத்து உடனடியாக நானும் காவலாளி என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட அனைத்து காகித கோப்பைகளையும் ரயில்வே அதிகாரிகள் அவசரஅவசரமாக வாபஸ் பெற்றனர்.chowkidhaar tea cups banned in trains

மேலும் ஐஆர்சிடிசி செய்தித்தொடர்பாளர்  கூறுகையில், " இதுபோன்ற வாசகங்கள் எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி, எங்களை அறியாமல் விளம்பரம் செய்யப்பட்டுவிட்டது. இந்த காகித கோப்பைகளை சப்ளை செய்த சேவைதாரருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது " என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios