பீகாரில் இடைத்தேர்தலில் பாஸ்வான் கட்சியில் சிராஜ், பசுபதி இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணாக இரு தரப்பினருக்கும் தனித்தனியே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பாட்னா: பீகாரில் இடைத்தேர்தலில் பாஸ்வான் கட்சியில் சிராஜ், பசுபதி இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணாக இரு தரப்பினருக்கும் தனித்தனியே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவை தொடர்ந்து அக்கட்சிக்கு அவரது மகன் சிராக் பாஸ்வான் தலைவரானார். அதே நேரத்தில் அவரது சித்தப்பா பசுபதி குமாரை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் காரணமாக பசுபதிக்கு அமைச்சர் பதவி தேடி வர… அவருக்கும், சிராக்குக்கும் மோதல் எழுந்தது. பீகாரில் காலியான 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

ஆகையால் சின்னத்தையும், கட்சியின் பெயரை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி காட்டியது. இந் நிலையில் நிலைமைக்கு தற்காலிக தீர்வு காரணமாக, சட்டசபை இடைத்தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இரு தரப்பினருக்கு தனித்தனி சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

சிராக் பாஸ்வான் தரப்புக்கு லோக் ஜன்சக்தி ராம் விலாஸ் என்ற கட்சி பெயர் தரப்பட்டுள்ளது. அவரது கட்சிக்கு ஹெலிகாப்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல பசுபதி குமாருக்கு ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி என்ற பெயரும் சின்னமாக தையல் எந்திரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இரண்டு தரப்பினருக்கும் இடையேயான பிரச்னை தற்காலிகமாக தீர்க்கப்பட்டு உள்ளது.