Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: சீனா-இந்தியாவிடம் சீண்டினால் இழப்பு சீனாவுக்கு தான். சர்வதேச மையம் அதிரடி ஆய்வு அறிக்கை.!!

என்ன தான் சீனா நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருந்தாலும் அதிக அளவில் ராணுவ வீரர்களை கொண்டிருந்தாலும் இந்தியாவிடம் இருக்கும் ராணுவ வீரர்களை சீனாவால் எதிர்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு இந்திய வீரர்கள் திறன் பெற்றிருக்கிறார்கள் என்று அமெரிக்காவில் உள்ள சர்வதேச ஆய்வு மையம் ஆய்வு நடத்தியிருக்கிறது.
 

China loses to India International Center for Action Study Report !!
Author
India, First Published Jun 22, 2020, 10:22 AM IST


என்ன தான் சீனா நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருந்தாலும் அதிக அளவில் ராணுவ வீரர்களை கொண்டிருந்தாலும் இந்தியாவிடம் இருக்கும் ராணுவ வீரர்களை சீனாவால் எதிர்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு இந்திய வீரர்கள் திறன் பெற்றிருக்கிறார்கள் என்று அமெரிக்காவில் உள்ள சர்வதேச ஆய்வு மையம் ஆய்வு நடத்தியிருக்கிறது.

China loses to India International Center for Action Study Report !!

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.அதில் இரு நாடுகளிலும் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கை, விமானங்கள் மூலம் தாக்கும் திறன் போன்றவை விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது.  இறுதியாக போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாமில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இந்தியாவும், சீனாவும் எல்லையில் வீரர்களை குவித்து வருகிறது. இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாலும் எல்லையில் பதற்றம் குறையவில்லை. சீனாவின் அச்சுறுத்தல்கள் எல்லாம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். ஏனென்றால் உலக அரங்கில் இந்தியா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. சீன விவகாரத்தில் இந்தியா துணிவதற்கு தனது நாட்டின் ராணுவ நிலைப்பாட்டில் இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளது தான் முக்கிய காரணம்.

China loses to India International Center for Action Study Report !!

சீன படை பலத்தின் முன் இந்தியா சாதாரணமானது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டு உள்ளது. இது முற்றிலும் தவறு. ராணுவ கட்டமைப்பு, தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் என்ற ஒட்டு மொத்த கணக்கீட்டில் சீனா முன்னணியில் இருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த கட்டமைப்புகள் அனைத்தும் பரந்து விரிந்த சீனாவின் எல்லையை பாதுகாக்க போதாது.போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அதன்படி சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் திறன் மிக சிறப்பாக உள்ளது. இந்திய-சீன போர் ஏற்பட்டால் அதில் தரைப்படை மற்றும் விமானப்படை தான் முக்கிய பங்கு வகிக்கும். இரு நாடுகளிலும் கடல் வழி தாக்குதல்கள் சாத்தியமில்லை.

China loses to India International Center for Action Study Report !!
தரைப்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையை பொறுத்தவரை இரு நாடுகளும் சம எண்ணிக்கையில் தான் உள்ளன. ஆனால் இந்திய-சீன எல்லையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் முன்னணியில் இருக்கிறது. அதாவது சீனா தனது நாட்டை பாதுகாக்க 5 படைப்பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளது. அதில் இந்திய எல்லை அருகே நிலைகொண்டு இருக்கும் படை மேற்கு திடேட்டர் கமாண்டட் ஆகும்.இந்த படைப்பிரிவில் இருக்கும் சீன வீரர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சத்து 30 ஆயிரம் தான் உள்ளது. இவர்கள் மட்டுமே மலை பாங்கான அந்த பகுதிகளில் போரிடும் திறன் பெற்று இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணுவம் அனைத்தும் இந்திய-சீன எல்லையில் தான் உள்ளது. அதாவது மொத்தம் 20 லட்சம் இந்திய வீரர்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்திய-சீன எல்லையில் இருக்கும் இடங்களை நன்கறிந்தவர்கள். மலை பகுதிகளில் போரிடும் திறன் பெற்றவர்கள். எனவே தரைப்படையில் இந்தியாவே பலம் பொருந்தி உள்ளது.

China loses to India International Center for Action Study Report !!

சீனாவின் மேற்கு திடேட்டர் கமாண்ட் பகுதியில் மொத்தம் 157 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் இந்த பகுதியில் மட்டும் 270 போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பை அழிக்கும் 68 சிறிய ரக விமானங்களும் உள்ளன. அதன்படி விமானப்படையின் எண்ணிக்கையில் இந்த பகுதியில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. சீனாவின் ஜே-10 போர் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் மிராஜ் விமானங்கள் உள்ளன. போர் என்றால் இரு நாடுகளும் முதலில் விமான தளங்களை குறி வைத்தே தாக்குதல்களை தொடங்கும்.
அதன்படி இந்தியா தனது பகுதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் சீனாவின் எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் மிக எளிதாக தாக்கி விடும். அந்த சூழ்நிலையில் சீனாவின் உட்பகுதியில் உள்ள விமான நிலையங்களில் இருந்து இந்திய பகுதிகளை தாக்குவது சீனாவிற்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஒரு வேளை தாக்குதலை தொடங்கினால் கூட இந்தியா அதனை எளிதாக முறியடிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

சீனா இந்தியாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் தாக்க 104 தாக்குதல்களை நடத்த வேண்டும். ஆனால் இந்தியாவின் 10 எண்ணிக்கையிலான அக்னி 3 ஏவுகணை மூலம் சீனாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் இந்தியாவால் தாக்க முடியும். அதேபோல் அக்னி-2 ஏவுகணைகள் மூலம் இந்தியா மத்திய சீன பகுதி முழுவதையும் தாக்கும் திறன் கொண்டது. மிக முக்கியமாக 51 அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட ஜாக்குவார் விமானங்கள் மூலம் ஒட்டுமொத்த சீனாவின் திபெத் பகுதியை இந்தியா எளிதாக அழித்து விடும்.

China loses to India International Center for Action Study Report !!

இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் சீனா தனது நீளமான எல்லையில் உள்ள அனைத்து படைகளையும் ஒன்று திரட்ட வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு அப்படியல்ல, எளிதாக தனது படைகளை சீன எல்லையில் சேர்த்து விடும். ஏனென்றால் இந்தியாவின் படைகளில் அதிக சதவீதம் ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தான் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். இந்தியா சீனாவை விட வலுவான நிலையில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios