*    கைசுத்தமான பிரதமர் மோடி, தனக்கென சொத்து சேர்க்கவில்லை. ரெண்டு செட் டிரெஸ்ஸை எடுத்து வைத்துக் கொண்டு ரயிலேறி போய்க் கொண்டே இருப்பார்: பி.ஜே.பி. பிரமுகர் முருகானந்தம். 

(சரியா சொன்னீங்க தல. ஆனா அதுல விடுபட்ட விஷயம் என்னான்னா, தங்க இழைகளில் செஞ்ச அந்த ரெண்டு செட் டிரெஸ்ஸோட விலை நாலஞ்சு கோடியாகவும், அந்த டிரெயினானது அவருக்குன்னே உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் புல்லட் டிரெயினாகவும் இருக்கும்! அம்புட்டுதான். அவ்வளவு எளிமைங்க நம்ம நமோ!)

*    வரவர அதிகாலை ஸ்பெஷல் ஷோவுக்கான மரியாதையே போயிருச்சு. என்ன படமெல்லாமோ இப்படி ஏற்பாடாகுது.: நடிகர் விஷ்ணு விஷால். 
(ஆமாண்ணே, உங்களுக்கு நீங்களே தயாரிச்சு, எழில் இயக்குற அந்த அரதப்பழைய கதையை கொண்ட அஞ்சு பைசா படத்துக்கெல்லாம் இப்படி இயர்லி மார்னிங் ஷோ கொடுக்கலேன்னா கோவம் வரத்தானே செய்யும்?)

*    இனி பெண்களை சீண்டுவது, ஈவ் டீஸ் செய்வது போன்ற டயலாக் பேசி, அம்மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன். 
(அரசியல்வாதிகளை விட மோசமா இருக்கீங்களே எஸ்.கே. உங்களோட புதுப்படமான Mr.லோக்கல் பட டீசர்ல ‘உன்ன மாதிரி லோக்கல் பசங்களை பார்த்தாலே எனக்கு பிடிக்காது’ன்னு நயன் தாரா சொல்ல, நீங்க,  ‘அப்ப.... டக்குன்னு வந்துடுச்சு. சொல்லிடட்டுமா?’ன்னு கேட்பீங்களே, அந்த கேப்ல நீங்க வெட்டுன கிடா என்னது? பார்த்தா வுக்கு ரைமிங்கா நீங்க போட்ட வார்த்தை, ஈவ் டீசிங் இல்லாம இஞ்சிபச்சடியா?)

*    தைலாபுரம் தோட்டத்தில் விருந்து முடிந்து கிளம்பிய முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் பேட்டி அளிக்காத காரணத்தினால் பல மணிநேரம் காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு மிக கடுமையான ஏமாற்றம்: செய்தி. 
(எல்லாம் ஒரு பயந்தேம். பயபுள்ளைக, விருந்துல என்ன மெனு? நாட்டுக்கோழியா, பிராய்லரான்னு ஆரம்பிச்சு பதறப் பதற கேட்டுப்புட்டாய்ங்கன்னு என்னத்தப்பே பதில் சொல்றது. அதாம் கமுக்கமா கார வுட்டுப்புட்டாய்ங்க.)

*    எங்களது தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நேர்மை மற்றும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விரைவில் அந்த அறிக்கை வெளியிடப்படும்: கமல்ஹாசன். 
(மிஸ்டர் ஒலகம், நீங்க இந்த கவிர்ச்சி மறுப்புக் கொள்கையை உங்க படங்கள்ளேயும் பயன்படுதி இருந்தீங்கன்னு வெய்யுங்க குடும்பங்குடும்பமா வந்து குந்தவெச்சு படத்தப் பார்த்திருப்பாய்ங்க. பக்காவா கலெக்‌ஷன் கல்லா கட்டியிருக்கும். அங்குட்டு அப்படி பிட்டுப் போட்டுட்டு, இங்குட்டு இப்படி இழுத்துக் கட்டுறது அம்புட்டு நல்லாவா இக்குது?)